மிலாது நபியையொட்டி விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 1,668 மதுபாட்டில்கள் பறிமுதல்
மிலாது நபியையொட்டி விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 1,668 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
கரூர்,
கரூர் திருமாநிலையூர் புதியஅமராவதி பாலம் அருகே சாய்கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, கரூர் மது விலக்குப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முரளி, பரமானந்தம் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் பெட்டிகளில் மதுபாட்டில்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, ராயனூர் தில்லை நகரை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் தங்கராஜ் (வயது 59) மற்றும் திருமாநிலையூர் காமராஜர் தெருவை சேர்ந்த அருண்குமார் (26) ஆகியோர் திருமாநிலையூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்தது தெரிய வந்தது. போலீசார் கணக்கீடு செய்த போது பெட்டிகளில் 1,668 மதுபாட்டில்கள் இருந்தன.
இன்று (புதன்கிழமை) மிலாது நபியையொட்டி டாஸ்மாக் கடை மூடப்படுவதால், புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பண்டிபானையை சேர்ந்த ரமேஷ் என்பவர் அறிவுறுத்தலின் பேரில் கரூர் கோவை ரோடு ரெட்டிபாளையம் பகுதியில் சந்துக்கடை அமைத்து விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வாங்கி செல்வதாக அந்த 2 பேரும் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை கொண்டு சென்றதாக கூறி வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், அருண்குமார் ஆகியோரை மது விலக்கு பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ரமேசை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் கடையை மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்குவோர் குறித்து உரிய முறையில் கண்காணித்து அது சட்டவிரோத விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story