மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு + "||" + Tractor seizure taken by sand without permission; Driver flew to the fleet

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்,

குத்தாலம் அருகே மேக்கிரிமங்கலத்தில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த டிராக்டரில் இருந்த ஒருவர் தப்பியோடினார். பின்னர் டிராக்டரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னியநல்லூர் மஞ்சலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட டிராக்டர் டிரைவர் மேக்கிரிமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜா (வயது 30) என்பதும், தப்பியோடியவர் சென்னியநல்லூர் கச்சார் மேலத்தெருவை சேர்ந்த மணி மகன் சுபிஷ் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக தப்பியோடிய சுபிசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேனில் கொண்டு வந்த போது சிக்கியது: மதுரையில் 80 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சேலத்தில் இருந்து மதுரைக்கு வேனில் கொண்டு வந்த 80 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் ரூ.4 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
பள்ளிப்பட்டு சோதனைச்சாவடியில் சென்னை நகைக்கடையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை தேர்தல் அதிகாரிகள் உத்தரவுபடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் பார் உரிமையாளர் கைது
பாபநாசம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது.
5. கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்-சாராயம் பறிமுதல் 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தப்பட்ட 480 மதுபாட்டில்கள்- சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.