மாவட்ட செய்திகள்

“பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார்” வைகோ தாக்கு + "||" + Prime Minister Modi is becoming a fascist Vaiko attack

“பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார்” வைகோ தாக்கு

“பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார்” வைகோ தாக்கு
பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார் என்று வைகோ கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், இந்த அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை மற்றும் திட்ட அறிக்கையை அனுப்புவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது மன்னிக்க முடியாததது. கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விவசாயம் அழிந்துவிட்டது.

1½ லட்சம் விவசாய குடும்பங்கள் அடியோடு அழிந்துவிட்டன. இதற்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் கோடியாவது கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் ரூ. 353 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் அடியோடு அழிக்கப்படும்.

எந்த ஒரு பாசிசவாதியும் அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள். ஏதாவது ஒரு வி‌ஷயத்தின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வர். பிரதமர் மோடியும் பாசிசவாதியாக மாறி வருகிறார். தமிழகத்தில் நடக்கும் எந்த தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...