மாவட்ட செய்திகள்

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது + "||" + Police arrest 11 people in an on-line lottery centers

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜி பார்க், பைகுல்லா, காலாசவுக்கி, அக்ரிபாடா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அச்சிடப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யாமல், கையால் எழுதப்பட்ட சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இடங்களில் உள்ள 7 ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, மேற்படி கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த மையங்களில் இருந்து 11 கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள், 5 செல்போன்கள் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது
புதுவை பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் மனைவி கைது கள்ளக்காதலனும் சிக்கினார்
அந்தியூர் அருகே நடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலையில் அவருடைய மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
3. கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ரூ.10½ லட்சம் குட்கா பறிமுதல் குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது
திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.10½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மளிகை பொருட்கள் எனக்கூறி குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
5. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி மின்வாரிய ஊழியர் மீது கடைக்காரர் புகார்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மீது கடைக்காரர் புகார் மனு கொடுத்தார்.