ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் விபத்தில் பலி
மதுரை காளவாசல் அருகே ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் விபத்தில் பலியானார்.
திருப்புவனம்,
மதுரை காளவாசல் அருகே உள்ள பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 38). இவர் திருப்புவனம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை தனது வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இளையான்குடிக்கு செல்லும் ஒரு லாரி வந்தது. திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு வந்த போது, லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கீழே விழுந்த ரவீந்திரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த காரைக்குடி அருகே உள்ள சிறுவாலையை சேர்ந்த முருகன் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார். இறந்த ரவீந்திரனுக்கு மனைவி அங்கயற்கண்ணியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.