மாவட்ட செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது + "||" + Near Sethiyatthoppu Worker arrested by his wife's neck cut

சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது

சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது
சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் அய்யப்பன்(வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பத்மாவதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்மாவதியின் நடத்தையில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இவர் களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், வீட்டில் இருந்த கத்தியால் பத்மாவதியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.


பலத்த காயமடைந்த பத்மாவதி சத்தம் போட்டார். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பத்மாவதியின் தந்தை பன்னீர்செல்வம் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து கொன்ற பெண்
செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் பெண் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை: பரமக்குடி கோர்ட்டில் மேலும் 3 பேர் சரண்
மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி கோர்ட்டில் மேலும் 3 பேர் சரணடைந்தனர்.
3. ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை: போலீஸ் தேடிய தொழிலாளி கைது
ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை வழக்கில் போலீஸ் தேடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
4. உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
5. இரட்டை கொலை: மனைவி, குழந்தையை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
எருமப்பட்டி அருகே மனைவி, 1½ வயது குழந்தையை கழுத்தறுத்து கொன்றது குறித்து அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.