மாவட்ட செய்திகள்

பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது + "||" + Five people have been arrested in painter murder case

பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது

பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது
புதுவை பெயிண்டர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார்தோட்டத்தை சேர்ந்த பெயிண்டரான பிரதீஷ் என்ற பிரகாஷ் (வயது 26) கடந்த 19–ந்தேதி தனது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஏற்கனவே அவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த சாமிப்பிள்ளைதோட்டம் அணைக்கரை மேட்டை சேர்ந்த முரளி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கொலையாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் (முத்தியால்பேட்டை), ரமேஷ் (சிறப்பு அதிரடிப்படை), கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலையாளிகள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான பள்ளித்தென்னல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்களை போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். அப்போது முரளி, குஞ்சுமணி என்ற மணிகண்டனன், பிரதாப் மற்றும் விஜய் என்ற சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாரின் விசாரணையில் பிரதீசுக்கும், முரளிக்கும் இடையே திருமண போஸ்டர் ஒட்டுவதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. மேலும் பொங்கலை தொடர்ந்து கரிநாள் அன்றும் இவர்களுக்குகிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக முரளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரதீசை கொலை செய்தது தெரியவந்தது. முரளி மீது லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது
கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை; வாலிபருக்கு வலைவீச்சு
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது
மதுவிருந்துக்கு அழைத்து மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
4. சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து ரூ.38 லட்சம் தங்கம் கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு ‘ஸ்பீக்கர்’ பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. முகிலனை கண்டுபிடிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் வாள்சண்டை வீரர் கைது
திருவட்டார் அருகே உள்ள தோட்டவாரம் ஏருக்கலாம்விளையை சேர்ந்தவர் டேவிட்ராஜ். வாள்சண்டை வீரரான இவர், நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார்.