ரஜினிகாந்த் இன்னும் நடிகராகவே இருக்கிறார் தம்பிதுரை பேட்டி


ரஜினிகாந்த் இன்னும் நடிகராகவே இருக்கிறார் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 4:45 AM IST (Updated: 19 Feb 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் இன்னும் நடிகராகவே இருக்கிறார் என தம்பிதுரை கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம், பவித்திரம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனு பெறும் முகாம் நடந்தது. இதில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

பின்னர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. அவர் இன்னும் நடிகராகவேதான் இருந்து வருகிறார். தி.மு.க.விற்கு எந்த கொள்கையும் கிடையாது. அந்த வகையில் மக்கள் செல்வாக்குடன் அ.தி.மு.க. வருகிற தேர்தலை வலிமையுடன் தான் எதிர்கொள்ள காத்திருக்கிறது. அ.தி.மு.க.வை குற்றம் சொல்வதே மு.க.ஸ்டாலின் வேலையாக உள்ளது.

கூட்டணி முடிவு எடுக்கும் குழுவில் நான் இல்லாததால் அது பற்றி கருத்து கூறமுடியாது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய மற்றும் தமிழக உளவுத்துறையை குறைத்து மதிப்பிட கூடாது. அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. அதன் பிறகு எதனால், எப்படி நடந்தது என்று உளவுத்துறை தான் கண்டுபிடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story