மாவட்ட செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர் + "||" + Condemned by the Sri Lankan Navy Fishermen The indefinite strike began

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்
இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராமேசுவரம்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், சிறைபிடித்து செல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய-மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் சமீபத்தில் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கொலம்பஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அவர் உள்பட 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகள் மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் பாம்பன் கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
2. என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
3. தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மண்டபம் அருகே படகை திருடி தப்பிச்சென்றவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டனர்
மண்டபம் அருகே படகை திருடி தப்பிச்சென்றவர்கள் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டனர்.
5. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.