ராஜபாளையத்தில் விபத்துகளை தவிர்க்க வாகன போக்குவரத்தில் மாற்றம் வேண்டும் கலெக்டரிடம் மனு
ராஜபாளையத்தில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அப்போது ஏராளமானோர் மனு கொடுத்தனர். மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் மைதீன் அப்துல்காதர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுவதால் ஒரு வழிப்பாதை மாற்றி விட்டனர். இதனால் தென்காசி சாலையில் வாகனங்கள் அதிகளவில் வந்து கொண்டு இருப்பதால் பஜார் வழியாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. அதிலும் பஜாரின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளதாலும், மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் நடுரோட்டில் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் மோதி உயிர்பலி ஏற்படும் நிலை உள்ளது.
இதைத்தவிர்க்க காலை 7 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரையிலும் மதுரை ரோட்டில் உள்ள அன்னப்பராஜா பள்ளியில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பே கனரக வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களை தற்காலிகமாக அகற்றிவிட்டு சாலையை அகலப்படுத்த வேண்டும். வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை செய்தால் வாகன விபத்துகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தேச மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பரத்ராஜா, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்ட குல்லூர் சந்தை அணை முறையான பராமரிப்பு இல்லாமல் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. கவுசிகாநதி மூலம் சாக்கடைநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் இந்த அணையை பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. எனவே மழைக்காலம் வரும் முன்பு இந்த அணையை தூர்வாரி சுத்தம் செய்வதுடன் அணை பகுதியில் பூங்கா அமைத்து இதனை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும் மீன் குத்தகையை தனியாருக்கு விடாமல் மகளிர் சுயஉதவிக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி நூலகம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூரைக்குண்டு பஞ்சாயத்தில் உள்ள நிலாநகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மிகுந்த சிரமப்படுவதாகவும், குடிநீர், சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரியும் மனு கொடுத்தனர். இதே போன்று சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரம் பகுதி மக்களும் தங்கள் பகுதியில் பல முறை மனு கொடுத்தும் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படாத நிலை உள்ளதால் உடனடியாக தேவையான குடிநீர் வசதி செய்து தரக் கோரி மனு கொடுத்தனர்.
ஆயர்தர்மம் பகுதியில் வசிக்கும் செங்கல்சூளை தொழிலாளர்கள் 60 பேர் தங்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள ரூ.2,000 நிதியுதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story