‘மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக தி.மு.க.வினர் சூளுரை ஏற்க வேண்டும்’ கனிமொழி எம்.பி. பேச்சு


‘மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக தி.மு.க.வினர் சூளுரை ஏற்க வேண்டும்’ கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 10:15 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக சூளுரை ஏற்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு கனி மொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏழை பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் புத்தாடை வழங்கும் விழா சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜெயின் பவனில் நடந்தது. மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. வரவேற்றார்.

விழாவில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் புத்தாடை வழங்கினர்.

விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது கூறிய தாவது:-
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கக்கூடிய ஒரு தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். டெல்லியில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள், மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார்?, என்ன கருத்துகளை முன்வைக்கிறார்? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை எப்படி வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதையும், பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும் மு.க.ஸ்டாலின் தைரியமாக தனது கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

தமிழ்நாட்டை காப்பாற்ற நமது கண்களுக்கு முன்னால் தெரியக்கூடிய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மு.க.ஸ்டாலின் தான். தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு, தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் தி.மு.க.வினர் சூளுரை எடுத்து கொண்டு அதற்கான
பணிகளை முன்னெடுத்து செல் வோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் பேசுகையில் ‘அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் மக்களை ஏமாற்றுகின்ற கூட்டமாக மாறிவிட்டது. வருகின்ற தேர்தல் மூலம் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும்’ என்றார்.

Next Story