மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2019 3:51 AM IST (Updated: 19 March 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதல் விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நஷ்டஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேவகோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பன் மகன் களஞ்சியம் (வயது 44). இவர் சென்னையில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் நிஷா (16), ஆஷா (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 5.9.2016 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திற்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றார்.

பின்பு அங்கிருந்து ஊருக்கு களஞ்சியம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பிராந்தனி முக்கு அருகே வந்த போது, எதிரே சிவா என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். இந்தநிலையில் 2 மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதநிலையில் மோதிக் கொண்டதில் களஞ்சியம் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கு நஷ்டஈடு கேட்டு களஞ்சியம் குடும்பத்தினர் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வக்கீல் பவுல் மெல்கியோர் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி கிருபாகரன் மதுரம், விபத்தில் பலியான களஞ்சியம் குடும்பத்திற்கு ரூ.24 லட்சத்து 32 ஆயிரத்து 500 மற்றும் 7½ சதவீத வட்டியுடன் வழங்க தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.


Next Story