பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1½ லட்சம் கொள்ளை சிறுவன் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1½ லட்சம் கொள்ளை சிறுவன் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 8:33 PM GMT)

அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மர்ம நபர்கள் 2 பேர் அலுவலக கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மர்ம நபர்கள் 2 பேர் அலுவலக கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருக்கும் கேமராவில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பணத்தை கொள்ளையடித்து சென்ற காட்சி பதிவாகி உள்ளது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த சங்கர் (வயது 20), அருண் (19), பாலாஜி (19) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 4 பேரையும் அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story