கம்பம் சுருளி அருவி கோவிலில் பயங்கரம்: கொள்ளையை தடுக்க முயன்ற பூசாரி வெட்டிக் கொலை
கம்பம் அருகே சுருளி அருவி கோவிலில் கொள்ளையை தடுக்க முயன்ற பூசாரியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். படுகாயமடைந்த மற்றொரு பூசாரிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பூதநாராயணன் கோவில் உள்ளது. அருவியில் குளித்து விட்டு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
இக்கோவிலில் சின்னமனூரை அடுத்துள்ள அய்யம்பட்டியை சேர்ந்த மலையன் என்ற பாண்டி (வயது 70) பூசாரியாக இருந்து வந்தார். கோவிலின் மற்றொரு பூசாரியாக பாலசுப்பிரமணி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் நடையை சாத்திவிட்டு பூசாரிகள் 2 பேரும் கோவிலின் உள்ளே படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். கோவிலில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
பூட்டு உடைக் கும் சத்தம் கேட்டு எழுந்த பூசாரி பாண்டி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உண்டியலை உடைக்க விடாமல் அவர் தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாய மடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கோவில் கருவறை அருகே பிணமாக சாய்ந்தார்.
பாண்டியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி மர்ம நபர்களை பார்த்து திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரையும் மர்ம நபர்கள் தாக்கினர். படுகாய மடைந்த பாலசுப்பிரமணி கோவில் வளாகத்தில் மயங்கி விழுந்தார். உடனே 2 பூசாரிகளும் இறந்து விட்டனர் என நினைத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நேற்று அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் அருவிக்கு வந்தனர். அவர்கள் நீராடி விட்டு கோவிலுக்குள் சென்றனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் பூசாரி பாண்டி இறந்து கிடப்பதையும், மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி, ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பூசாரி பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த பூசாரி பாலசுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலையாளிகளை கண்டறிய தேனியில் இருந்து மோப்ப நாய் ’லக்கி’ கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கோவிலில் இருந்து சுருளி அருவி அருகேயுள்ள பாலம் வரை ஓடி நின்றது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் கோவில் அருகேயுள்ள தனியார் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கோவிலுக்குள் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் உள்ளே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்பு சீட்டாக வைத்து கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள் பூசாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story