திருக்கனூரில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபரை கொலை செய்த அண்ணன் கைது
திருக்கனூரில் வாலிபரை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். தாயையும், மனைவியையும் தரக்குறைவாக திட்டியதால் கட்டையால் அடித்ததாக போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
திருக்கனூர்,
திருக்கனூர் காந்தி நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி உதவியாளர். இவரது மனைவி விஜயா சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விஜயதாஸ் (வயது 36), விமல் (33) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் விமல் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
மது பழக்கத்துக்கு அடிமையான விமல் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மது குடிப்பதற்காக தனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று தாயார் விஜயா வேலை செய்யும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விமல் பணம் கேட்டு தகராறு செய்தார். இது குறித்து விஜயா தனது மூத்த மகன் விஜயதாசுக்கு போன் மூலம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாலையில் வீட்டுக்கு வந்த விமலிடம் விஜயதாஸ் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஆத்திரத்தில் அங்கு கிடந்த கட்டையால் விமலை விஜயதாஸ் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த விமல் பரிதாபமாகச் செத்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த விஜயதாஸ் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த கொலை குறித்து திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தப்பி ஓடிய விஜயதாசை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருக்கனூர் ஸ்ரீராம் நகரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
கைதான விஜயதாஸ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
மது குடிக்கும் பழக்கம் உள்ள எனது தம்பி விமல், வேலைக்கு எதுவும் செல்லாமல், மதுகுடிப்பதற்கு எனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று எனது தாயார் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கே சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் பலர் முன்னிலையில் எனது தாயாரை தரக்குறைவாக திட்டி அவமானப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி எனக்கு தெரிய வந்தது. அதனால் வீட்டுக்கு வந்த விமலை நான் கண்டித்தேன். அப்போது அவர் மீண்டும் எனது தாயாரையும், எனது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டினான்.
இதில் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து விமலை அடித்தேன். இதில் அவன் சுருண்டு விழுந்து இறந்துவிட்டான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் கொலையை மறைக்க தம்பியின் உடலை எனது காரில் எடுத்துச் சென்று காட்டேரிக்குப்பத்தில் முட்புதர் பகுதியில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த எனது பெற்றோர், தம்பியை எங்கே என்று கேட்டு விசாரித்தனர். அதற்கு நான் அவன் எங்காவது குடிக்கச் சென்றிருப்பான் என கூறினேன். மறுநாள் காலையிலும் என் பெற்றோர் தம்பி எங்கே? என்று கேட்டபோது, எதையும் மறைக்காமல் நடந்ததை அவர்களிடம் கூறிவிட்டேன்.
அதனால் அதிர்ச்சி அடைந்த என் பெற்றோர் தம்பி உடலை உடனே வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டு, போலீசில் சென்று சரண் அடையும்படி கூறினார்கள். அதையடுத்து நான் காரில் சென்று தம்பியின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தேன். பின்னர் போலீசில் சரண் அடைவதாக அவர்களிடம் கூறிவிட்டு சென்றேன்.
ஆனால் சரண் அடைய விருப்பமில்லாமல் திருக்கனூர் ஸ்ரீராம் நகரில் பதுங்கி இருந்தேன். அப்போது போலீசார் வந்து என்னை மடக்கி பிடித்துவிட்டனர். இவ்வாறு போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து விஜயதாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story