மாவட்ட செய்திகள்

திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து + "||" + Trichy-Erode route service changed: Karur passenger train canceled on May 28

திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து

திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம்: கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து
திருச்சி-ஈரோடு வழித்தட சேவையில் மாற்றம் காரணமாக, கரூர் பயணிகள் ரெயில் 28-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி,

திருச்சி-ஈரோடு வழித்தடத்தில் ரெயில் சேவையில் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 28-ந் தேதி, ஜூன் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56712) ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (56841) கரூர்-ஈரோடு இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயில் (56713) திருச்சி கோட்டை-கரூர் இடையே 90 நிமிடங்கள் தாமதமாகும். வருகிற 28-ந் தேதி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (56110), கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் (76836), திருச்சி-கரூர் பயணிகள் ரெயில் (76833) ஆகிய ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பாலக்காடு- திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் கரூர்-ஈரோடு இடையேயும் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-பாலக்காடு பயணிகள் ரெயில் திருச்சி கோட்டை-கரூர் இடையே 80 நிமிடங்கள் தாமதமாகும். ஜூன் மாதம் 1-ந் தேதி பாலக்காடு-திருச்சி பயணிகள் ரெயில் ஈரோடு-திருச்சி இடையேயும், திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் கரூர்-ஈரோடு இடையேயும், திருச்சி- பாலக்காடு பயணிகள் ரெயில் திருச்சி கோட்டை- கரூர் இடையே 90 நிமிடங்கள் தாமதமாகும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்றதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சி விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பி சென்றதால் 152 பயணிகள் உயிர் தப்பினர்.
2. திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்
திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. திருச்சி ரெயில்வே மின்பாதை பராமரிப்பு என்ஜின் புதுப்பிப்பு
திருச்சி ரெயில்வே மின்பாதை பராமரிப்பு என்ஜின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
4. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி
கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
5. திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி
திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...