நாகையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை


நாகையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 May 2019 3:30 AM IST (Updated: 27 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவரது மனைவி சசிகலா (வயது42). இவர் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா அதிராம்பட்டினத்தில் இருந்து நாகைக்கு பஸ்சில் வந்தார். பின்னர் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பஸ்சில் ஏறினார்.

திருட்டு

அப்போது பஸ்சில் சசிகலா பின்னால் நின்று கொண்டிருந்த மர்மநபர், சசிகலாவின் கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து நைசாக இறங்கி சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பணம் திருட்டுப்போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சசிகலா இது குறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Next Story