கும்பகோணத்தில் 16 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு அதிகாரி தகவல்
கும்பகோணத்தில் உள்ள 16 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக கும்பகோணம் கல்வி மாவட்ட அதிகாரி பாப்பம்மாள் கூறி உள்ளார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 8-ந் தேதி, 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் எழுத்து தேர்வு வருகிற 8-ந் தேதியும், 9-ந் தேதி 2-ம் தாள் எழுத்து தேர்வும் நடக்கிறது.
கும்பகோணம் கிறிஸ்ட் தி கிங் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, அல்அமீன் மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்கள் உள்பட 16 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தாள் தேர்வை 1,860 பேரும், 2-ம் தாள் தேர்வை 5,589 பேரும் எழுத உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story