காஞ்சீபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரத்தை வறட்சி மாவட்டமாக  அறிவிக்கக்கோரி விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 24 Jun 2019 5:03 PM GMT)

காஞ்சீபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே காஞ்சீபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.நேரு, இ.லாரன்ஸ், எம்.ஆறுமுகம், டி.லிங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.60 ஆயிரம் இதர பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத்தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், குடும்பத்திற்கு வேலையில்லா காலநிவாரணம் ரூ.10 ஆயிரம், மாதம் 25 கிலோ அரிசி வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, பாலாற்றிலும், செய்யாற்றிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்டி நீர்்வளத்தை பாதுகாக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு முழு மானியத்துடன் கூடிய தீவனம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வறட்சி காலத்தில் 200 நாட்களாக உயர்த்தி வழங்கி ரூ.400 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story