பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்


பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 3 July 2019 3:28 AM IST (Updated: 3 July 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

சேலம்,

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

செப்டம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 25-ந் தேதிக்கு முன்பும், புதியதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும். அரசு இணையதளத்தில் (www.tn.gov.in/bcmbcdept) இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story