மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை, நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது + "||" + Rain poured out in Kodaikanal, Floods were flooding the falls

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை, நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை, நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது
கொடைக்கானல் பகுதியில் கொட்டி தீர்த்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு சரியான நேரத்தில் மழை பெய்ய தொடங்காததால் நிலையில் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

இதன்காரணமாக நகர் மட்டுமின்றி கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இருப்பினும் இரவு நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

அதனைத்தொடர்ந்து நேற்று காலையில் லேசான மேகமூட்டம் நிலையில் நிலவியது. பின்னர் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரை ஒட்டியுள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர்சோழா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டது.

இந்த மழை காரணமாக நகர் மற்றும் கிராம பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும். பலத்த மழையை தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்ததன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் அடர்ந்த மேக மூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. அதன்படி நேற்று காலையில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் இருந்தது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், குளிர்பான கடைகளை தேடி பொதுமக்கள் சென்றனர். இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதைத்தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. திண்டுக்கல் நகரை குளிர்விக்கும் விதமாக பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை, நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பெள்ளாதிகுளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
2. நெல்லையில் பலத்த மழை: 3 வீடுகள் இடிந்தன; 6 ஆடுகள் சாவு
நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையொட்டி 3 வீடுகள் இடிந்தன. 6 ஆடுகள் பலியானது.
3. மங்கலம் பகுதியில், பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
மங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
4. எட்டயபுரம், கழுகுமலையில் பலத்த மழை
எட்டயபுரம், கழுகுமலையில் பலத்த மழை பெய்தது.
5. பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கி அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சீரமைப்பு பணியில் ஈடுபட கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.