மாவட்ட செய்திகள்

கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல் + "||" + Uma Maheshwari, District Collector, Government Decision on Purchase of Copper Coconuts

கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது கொப்பரை தேங்காய் விலை குறைந்து உள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 76 எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தேங்காய் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்புக்கூட்டி கொப்பரை தேங்காய் விற்பனை செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் 450 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும், 50 மெட்ரிக் டன் பந்து கொப் பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முதன்மை கொள்முதல் நிலையமாகவும், அறந்தாங்கி தென்னை வணிக வளாகம் துணை கொள்முதல் நிலையமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசினால் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றிற்கு ரூ.99.20 மற்றும் அரவை கொப்பரைக்கு ரூ.95.21 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதல் கடந்த 7-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி வரை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல் பொருட்கள் (1 சதவீதம்), பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சில்லுகள் 10 சதவீதம் (எடையில்) ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்கலாம். பந்து கொப்பரையின் குறைந்தபட்ச தரம் சுற்றளவு 75 மி.மீ., அயல் பொருட்கள் 0.2 சதவீதம் (எடையில்), பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 2 சதவீதம் (எண்ணிக்கையில்), சுருக்கம் கொண்ட கொப்பரைகள் 10 சதவீதம் (எண்ணிக்கையில்), சில்லுகள் 1 சதவீதம் (எடையில்) ஈரப்பதம் 7 சதவீதம் கொண்டதாக இருக்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
2. இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.8.72 கோடி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தகவல்
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் லாபம் ரூ.8.72 கோடி என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தூதரக தொடர்பு அலுவலகம் வசந்தகுமார் எம்.பி. தகவல்
மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தூதரக தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும் என வசந்தகுமார் எம்.பி. கூறினார்.
4. வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
5. கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
கூனிச்சம்பட்டு கிராமத்தில் தாமரை குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார்.