மாவட்ட செய்திகள்

கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு + "||" + Man convicted for murdering temple priest

கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
கோவில் பூசாரி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகே ஒரு கோவில் அமைத்து அதில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2009–ம் ஆண்டு சென்னையில் உள்ள மகனை பார்த்து விட்டு மற்றொரு மகனான அறிமுருகனுடன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது செய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் என்ற ஊனம் கண்ணன் (40) என்பவர் சின்னப்பனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். இதற்கு பூசாரி சின்னப்பன் மறுக்கவே அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து கண்ணன் தப்பி ஓடி விட்டார்.

அங்கு இருந்தவர்கள் சின்னப்பனை செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் கண்ணனை கைது செய்து அவர் மீது செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன், கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.


தொடர்புடைய செய்திகள்

1. சொத்து தகராறில் பெண் குத்திக்கொலை; கத்தியுடன் போலீசில் தம்பி சரண்
ஆரணியில் சொத்து தகராறில் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதாக போலீசில் தம்பி சரண் அடைந்தார்.
2. ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
3. ஜோலார்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் வெட்டிக்கொலை
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மது குடிக்க அழைத்துச்சென்ற கும்பல் அவரது கைகளை பின்புறமாக கட்டி தலையில் கத்தியால் சரமாரி வெட்டி கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளனர்.
4. பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை
பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
5. சொத்து தகராறில் தம்பியை கொன்றவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்தவருக்கும், அவரது மகனுக்கும் சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.