டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அரசு ஊழியர் சங்க மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அரசு ஊழியர் சங்க மகளிர் மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கையாளர் வாசுகி முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் சித்ரா, சமூக செயல்பாட்டாளர் லீலாவதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
சுப்ரீம் கோாட்டு வழிகாட்டுதல்படி பணிபுரியும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை விசாரிக்க உடனடியாக விசாகா கமிட்டியை அமைக்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
புதிய கல்வி கொள்கை
தேசிய புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு காரணமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரன், மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் கலா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story