சேலம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் பரிதவித்த பொதுமக்கள்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த கனமழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவித்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவு வரை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் காலையில் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட முடிய வில்லை. அதே போன்று நடைபயிற்சி செய்ய முடியாமல் ஆண்கள், பெண்கள் தவித்தனர்.
அரிசிபாளையம், தோப்பு காடு, சினிமா நகர், சத்திரம், சங்கர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டனர். சேலத்தில் மேம்பாலம் கட்டும் இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் பகுதியில் வசிக்கும் தங்காயி (வயது 72), காந்தம்மாள் (70) ஆகிய 2 மூதாட்டிகளின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு வந்த கன்டெய்னர் லாரி நள்ளிரவு 2 மணி அளவில் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே பலத்த மழையால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. மேலும் சேலம் சத்திரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தையும் தண்ணீர் சூழ்ந்தது.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அருகில் உள்ள பச்சப்பட்டி பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தூங்க முடியாமலும், சாப்பாடு, தண்ணீர் இன்றியும் பரிதவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பலத்த மழையால் செம்மாண்டப்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பச்சனம்பட்டியில் விசைத்தறி கூடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதம் அடைந்தன. வேங்கனூரில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. முள்ளுசெட்டிபட்டியில் பூபதி என்பவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை சரிந்ததால், கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. செம்மாண்டப்பட்டி, தாராபுரம், தாத்தியம்பட்டி, பல்பாக்கி உள்பட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட கிணறுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஓமலூர் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேச்சேரி அருகே எம்.என்.பட்டி கோவிலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியை கடக்க பொதுமக்கள் தண்ணீரில் பரிசலை இயக்கினார்கள். எடப்பாடி பகுதியில் பெய்த மழையின் காரணமாக பூலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பருத்தி, சோளம், நிலக்கடலை உள்பட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குருக்கம்பட்டியில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மேட்டூர்-89.2, சேலம்-87.6, வாழப்பாடி-85, ஓமலூர்-83, ஆனைமடுவு-82, பெத்தநாயக்கன்பாளையம்-72, கெங்கவல்லி-58, எடப்பாடி-49.4, ஆத்தூர்-45.6, தம்மம்பட்டி-30.6, காடையாம்பட்டி-29.6, ஏற்காடு-29, கரியகோவில்-27, வீரகனூர்-19.2, சங்ககிரி-17.1.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வீட்டில் உள்ளவர்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இருப்பினும் ஏரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், வீடுகளுக்குள் புகுந்த நீரை முற்றிலும் வெளியேற்ற முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பிரிட்ஜ், வாசிங்மெசின், டி.வி. உள்ளிட்ட பல்வேறு மின்சாதனப்பொருட்கள் பழுதாகி உள்ளன. மேலும் மாணவ, மாணவிகளின் சீருடைகள், பாடப்புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து போனது.
மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பை மழைநீர் சூழ்ந்து, குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. தகவல் அறிந்ததும் நகராட்சி துப்புரவு அலுவலர் ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று தேங்கி நின்ற தண்ணீரை அகற்றினார்கள். மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இளம்பிள்ளை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக தெசவிளக்கு கரடு, சின்னப்பம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் பருத்தி, பச்சை பயறு உள்பட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு, திடீரென்று வெள்ளம் வந்ததால், தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஓமலூர் மற்றும் பச்சனம்பட்டி, திண்டமங்கலம், செம்மாண்டப்பட்டி, காருவள்ளி, காமலாபுரம், தாத்தியம்பட்டி உள்பட ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழையினால் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. காருவள்ளியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் நேற்று காலை தனியார் பள்ளி வேன் சிக்கியது. அதில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இறங்கி வந்து விட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த வேன் மீட்கப்பட்டது.
மேலும் பலத்த மழையால் செம்மாண்டப்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பச்சனம்பட்டியில் விசைத்தறி கூடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதம் அடைந்தன. வேங்கனூரில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. முள்ளுசெட்டிபட்டியில் பூபதி என்பவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை சரிந்ததால், கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. செம்மாண்டப்பட்டி, தாராபுரம், தாத்தியம்பட்டி, பல்பாக்கி உள்பட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட கிணறுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஓமலூர் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேச்சேரி அருகே எம்.என்.பட்டி கோவிலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியை கடக்க பொதுமக்கள் தண்ணீரில் பரிசலை இயக்கினார்கள். எடப்பாடி பகுதியில் பெய்த மழையின் காரணமாக பூலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பருத்தி, சோளம், நிலக்கடலை உள்பட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குருக்கம்பட்டியில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மேட்டூர்-89.2, சேலம்-87.6, வாழப்பாடி-85, ஓமலூர்-83, ஆனைமடுவு-82, பெத்தநாயக்கன்பாளையம்-72, கெங்கவல்லி-58, எடப்பாடி-49.4, ஆத்தூர்-45.6, தம்மம்பட்டி-30.6, காடையாம்பட்டி-29.6, ஏற்காடு-29, கரியகோவில்-27, வீரகனூர்-19.2, சங்ககிரி-17.1.
Related Tags :
Next Story