மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு + "||" + Near Antipatti, Young woman asking for Rs 50 lakh dowry harassment

ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள்புரம் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் சுப்புலட்சுமி(வயது 25). இவருக்கும் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும்(29) கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சுப்புலட்சுமிக்கு 22 பவுன் நகை, ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொண்டு வர வேண்டும் என கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் வரதட்சணை கேட்டு சுப்புலட்சுமியை கொடுமைபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கணவர் சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நாகராஜ், பிரபு, சாத்துராம், சங்கரேஸ்வரி, பங்கஜவள்ளி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விமானி அறைக்குள் இளம்பெண்: விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை
விமானி அறைக்குள் இளம்பெண் ஒருவர் பயணம் செய்ததால், விமானம் ஓட்ட சீன விமானிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
2. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய் கொலை: இளம்பெண்-காதலன் கைது
திருவையாறு அருகே முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
3. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு
ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் இளம்பெண் பெற்றெடுத்த 5 குழந்தைகளில் ஒன்று உயிரிழந்து உள்ளது.
5. ஆண்டிப்பட்டி அருகே, வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்திய கணவர் கைது - மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.