புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 8 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 8 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 6:36 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 350 விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப் பட்டினம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 34), மோகன் (28), நாகராஜ் (30), மைக்கேல் (34) ஆகிய 4 மீனவர்களும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாசு (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த தினேஷ் (24), சாரதி (35), அரவிந்த் (23), சிவகுமார் (30) ஆகிய 4 மீனவர்களும் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

8 பேர் கைது

அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story