மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு + "||" + Women suspended work on cell phone tower installation

செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அசேஷம் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பெண்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அசேஷம் கிராமத்தில் உள்ள பாரதிதாசன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோபுரம் அமைக்கும் இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அசேஷம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளமதி மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.


தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பது இங்கு வசிப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து புகார் அளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு: ஆந்திராவில் தொடரும் போராட்டம்
3 தலைநகர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2. செல்போனால் விபரீதம்: 100 அடி மலையில் இருந்து விழுந்த பெண்
செல்போனை பார்த்தபடியே சென்றதால், 100 அடி மலையில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்தவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
மதுக்கூர் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
4. தேவர்சோலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி
தேவர்சோலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் பேரணி சென்றனர்.
5. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.