ஜெயலலிதா பிறந்தநாள்: பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்


ஜெயலலிதா பிறந்தநாள்: பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் - எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 25 Feb 2020 9:30 PM GMT (Updated: 26 Feb 2020 12:18 AM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வங்கியின் முன்பு நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.தெய்வநாயகம் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் பி.முத்துசாமி, இணைச்செயலாளர் பி.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு 72 பெண்களுக்கு சேலைகளை வழங்கினார். இதில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் வங்கியின் துணைத்தலைவர் பி.கேசவமூர்த்தி, இயக்குனர் வி.எம்.லோகநாதன், தமிழ்நாடு அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா பணியாளர் சங்க கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் எஸ்.பழனிசாமி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநகர்காலனியில் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு 72 பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்கள். இதில் ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவதானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story