மாவட்ட செய்திகள்

பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம் + "||" + Husband arrested for murdering woman Sensational confession

பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்

பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கணவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
அரகண்டநல்லூர் அருகே பெண்ணை அடித்து கொன்ற வழக்கில் கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் பிரபு(வயது 37). இவரது மனைவி ராஜகுமாரி(33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் ஆரோக்கியராஜ் பிரபு தனது மனைவி ராஜகுமாரியை (வயது 33) மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜ்பிரபுவை நேற்று கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன்? என்று அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான் எனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தேன். எனக்கு குடிப்பழக்கம் இருப்பதால் எனது மனைவியும் குடிக்க ஆரம்பித்தாள். இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் குடிக்கு அடிமையானது போல் அவளது நடவடிக்கை மாறியது. அதோடு அவளுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் நான் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் தெரியவரவே வீட்டை காலி செய்யுமாறு அவர் கூறினார்.

கொன்று விடுவேன்

இதனால் வேறு வழியின்றி சொந்த ஊரான ஆலம்பாடி கிராமத்திற்கே வந்துவிட்டேன். சுமார் 1 வருட காலமாக ஆலம்பாடியில் தங்கி பிழைப்பு தேடிவந்தேன். சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் எனக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே வேறுவழியில்லாமல் நான் மட்டும் மீண்டும் சென்னைக்கே சென்று வேலை செய்யலாம், மனைவியும் பிள்ளைகளும் சொந்த ஊரிலேயே இருக்கலாம் என முடிவு செய்து என் மனைவிடம் சொன்னபோது அதனை ஏற்க மறுத்ததுடன், நானும்சென்னைக்கு வருவேன் என கூறி தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளை அழைத்துச்செல்லாவிட்டால் என்னையும், 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினாள். இதனால் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜகுமாரியின் தலையில் அடித்து கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேர் கைது
சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை: மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு
சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை பிடிப்பதற்காக, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
3. மகன்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்ட பெண் அடித்து கொலை அவினாசி அருகே பயங்கரம்
அவினாசி அருகே கிரிக்கெட் விளையாட்டின்போது மகன்களை தாக்கியவர்களை தட்டி கேட்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.
4. உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது
உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது
உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.