கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட எல்லை மூடப்பட்டது


கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட எல்லை மூடப்பட்டது
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 10:30 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை-தேனி மாவட்ட எல்லை மூடப்பட்டது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் மதுரை-தேனி மாவட்ட எல்லை உள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக இந்த எல்லை நேற்று மாலை 6 மணிக்கு மூடப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆம்புலன்ஸ், பால், பெட்ரோல், டீசல், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும் மீண்டும் அந்தந்த மாவட்ட எல்லைக்கே திருப்பி அனுப்பப்பட்டன. 6 மணிக்கு மேல் வந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மதுரை-திண்டுக்கல் மாவட்ட எல்லையான உத்தப்பநாயக்கனூரை அடுத்துள்ள முனீஸ்வரன்கோவில் என்ற இடத்தில் மாவட்ட எல்லை மூடப்பட்டது. 

அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட எல்லையை தாண்டாமல் வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Next Story