திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து


திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 25 May 2020 4:15 AM IST (Updated: 25 May 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை சேர்ந்தவர் சேகர் (வயது 48). இவர், அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடையின் அருகே உள்ள வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள சேகரின் மரக்கடைக்கும் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் மரக்கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Next Story