மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 274 பேர் பாதிப்பு + "||" + 274 people infected with coronavirus in Chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 274 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 274 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள வீரபாகு நகர் பகுதியை சேர்ந்த 41 வயது ஆண், பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 63 வயது மூதாட்டி, ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், ராமதாஸ் தெருவை சேர்ந்த 30 வயது பெண், சீனிவாசபுரம் ராமு தெருவில் வசிக்கும் 48 வயது பெண், வல்லாஞ்சேரி ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, வண்டலூர் கணபதி நகரில் வசிக்கும் 70 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


ஊரப்பாக்கம் முத்து மாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்த 39 வயது பெண், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த 53 வயது பெண், கண்டிகை அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 27 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,633 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,445 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 81 வயது மூதாட்டி, 88 வயது, 75 வயது, 72 வயது, 66 வயது, 65 வயது, 62 வயது மற்றும் 57 வயது ஆண் ஆகிய 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் வசித்து வரும் 7 மாத கர்ப்பிணியான 20 வயது இளம்பெண், ஆரணி அருகே போந்தவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் 32 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 4,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 62 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,650 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியில் 48 வயது பெண், ஆதனூர் ஊராட்சியில் உள்ள ஜவகரய்யா நகரை சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 152 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547 ஆனது. இவர்களில் 983 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,531 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 33 பேர் பலியானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில், வசூல் பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்ற போது துணிகரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு அரிவாள் வெட்டு; ரூ.8 லட்சம் கொள்ளை
செய்யூர் அருகே டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்ற போது, வழிமறித்த கொள்ளையர்கள் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
2. செங்கல்பட்டு அருகே பரிதாபம்; கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி
செங்கல்பட்டு அருகே கல்வாரி குட்டையில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்.
3. டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி
டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு
பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.81 கோடியாக உயர்ந்துள்ளது.