செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி இதுவரை 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
சென்னையை அடுத்துள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,893 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டம் முழுவதும் 152 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,355 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 3,127 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story