செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 July 2020 6:44 AM IST (Updated: 17 July 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள ராமலிங்கம் தெருவை சேர்ந்த 29 வயது வாலிபர், சிங்கப்பெருமாள்கோவில் அருகே திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் 67 வயது முதியவர், பேரமனூர் விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த 49 வயது பெண், வண்டலூர் வெங்கடேசபுரம் 10-வது தெருவில் வசிக்கும் 28 வயது வாலிபர், 24 வயது, 25 வயது இளைஞர்கள், ஓட்டேரி 6-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், 17 வயது சிறுமி, 1-வது மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண், ஊரப்பாக்கம் பிரியா நகர் வைகை தெருவை சேர்ந்த 22 வயது இளைஞர், 22 வயது இளம்பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,908 ஆக உயர்ந்தது. இவர்களில் 6,561 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 70 வயது மூதாட்டி, 64 வயது முதியவர், 51 வயது பெண், 45 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர் பகுதி காயிதேமில்லத் குறுக்கு தெருவைச் சேர்ந்த 27 வயது வாலிபர் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,310 ஆனது. இவர்களில் 2,171 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2,081 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 பேர் பலியாகி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், ராஜாஜிபுரம், அம்சா நகர், லட்சுமிபுரம், முகமது அலி தெரு, அக்கரகாரம் தெரு போன்ற பகுதிகளில் நேற்று 14 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் தொடுகாடு, உளுந்தை, கல்லம்பேடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம், போளிவாக்கம், மணவாளநகர், அதிகத்தூர் பகுதியில் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 8,107 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்து 785 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

Next Story