மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 354 பேருக்கு தொற்று + "||" + In Chengalpattu district, the corona infection has crossed 14,000 and infected 354 people in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 354 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 354 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 354 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் 25 பேருக்கும், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண், காமேஸ்வரி நகரில் வசிக்கும் 25 வயது வாலிபர் உள்பட 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 197 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்தது. 3,471 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 10 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரசால் 13 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 9,315 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 229 ஆனது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியில் 3 பேர், வரதராஜபுரம் பகுதியில் ஒருவர் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 604 ஆக உயர்ந்தது.

இவர்களில் 5 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் பலியானதையொட்டி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆனது. 3,111 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. புதிதாக 199 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலி தென்காசியில் 121 பேருக்கு தொற்று
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் பலியானார்கள். தென்காசியில் 121 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. புதிதாக 199 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேர் பலி தென்காசியில் 121 பேருக்கு தொற்று
நெல்லை, தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் பலியானார்கள். தென்காசியில் 121 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியது.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 பேருக்கு தொழில் தொடங்க கொரோனா சிறப்பு நிதிஉதவி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 பேருக்கு தொழில் தொடங்க கொரோனா சிறப்பு நிதிஉதவி கலெக்டர் தகவல்.