பன்வெல், வசாய் ரோடு வழியாக காந்திதாம், ஜாம்நகர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள்
பன்வெல், வசாய் ரோடு வழியாக காந்திகதாம், ஜாம்நகர்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் கள் இயக்கப்படுகிறது.
மும்பை,
மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பன்வெல், வசாய் ரோடு வழியாக ஜாம்நகர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வண்டி எண்: 09578 ஜாம்நகர்- நெல்லை சிறப்பு ரெயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு, திங்கட்கிழமை இரவு 10.10 மணிக்கு நெல்லை சென்றடையும். நவம்பர் 6-ந் தேதி முதல் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல நவம்பர் 9-ந் தேதி முதல் நெல்லை - ஜாம்நகர் இடையே (09577) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு புதன், வியாழன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு ஜாம்நகர் சென்றடையும். இந்த ரெயில் சூரத், வாபி, பொய்சர், வசாய் ரோடு, பன்வெல், நாகர்கோவில், வள்ளியூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காந்திதாம் - நெல்லை
இதேபோல காந்திதாம் இடையே வாரந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளது. வருகிற 26-ந் தேதி முதல் நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் திங்கள் தோறும் மதியம் 2 மணிக்கு காந்திதாமில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (09424) 3-வது நாள் காலை 11.30 மணிக்கு நெல்லை வந்தடையும்.
இதேபோல நவம்பர் 5-ந் தேதியில் இருந்து 12, 19, 26, டிசம்பர் 3-ந் தேதிகளில் காலை 7.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (09423) 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு காந்திதாம் சென்றடையும். அக்டோபர் 29-ந் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மட்டும் 3-வது நாள் காலை 6.40 மணிக்கு காந்திதாம் சென்றடையும். இந்த ரெயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், பன்வெல், வசாய் ரோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story