கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு
x
தினத்தந்தி 25 Oct 2020 6:04 AM IST (Updated: 25 Oct 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.

பெங்களூரு, 


கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 93 ஆயிரத்து 907 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 4,471 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 378 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். நேற்று புதிதாக 52 பேர் இறந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு 10 ஆயிரத்து 873 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த சில தினங்களாக பாதிப்பு 5, 6, 7 ஆயிரங்களாகவும், உயிரிழப்பு 70, 80, 90 என்றும் சென்று கொண்டு இருந்தது. நேற்று பாதிப்பு 4,500-க்கும் கீழ் வந்து உள்ளது. உயிரிழப்பும் 52 ஆக குறைந்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் 57 பேரும், பல்லாரியில் 129 பேரும், பெலகாவியில் 73 பேரும், பெங்களூரு புறநகரில் 102 பேரும், பெங்களூரு நகரில் 2,251 பேரும், பீதரில் 7 பேரும், சாம்ராஜ்நகரில் 34 பேரும், சிக்பள்ளாப்பூரில் 78 பேரும், சிக்கமகளூருவில் 85 பேரும், சித்ரதுர்காவில் 84 பேரும், தட்சிண கன்னடாவில் 136 பேரும், தாவணகெரேயில் 52 பேரும், தார்வாரில் 93 பேரும், கதக்கில் 14 பேரும், ஹாசனில் 136 பேரும், ஹாவேரியில் 30 பேரும், கலபுரகியில் 71 பேரும், குடகில் 33 பேரும், கோலாரில் 45 பேரும், கொப்பலில் 49 பேரும், மண்டியாவில் 163 பேரும், மைசூருவில் 173 பேரும், ராய்ச்சூரில் 25 பேரும், ராமநகரில் 22 பேரும், சிவமொக்காவில் 79 பேரும், துமகூருவில் 232 பேரும், உடுப்பியில் 81 பேரும், உத்தர கன்னடாவில் 48 பேரும், விஜயாப்புராவில் 62 பேரும், யாதகிரியில் 27 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூருவில் 26 பேர் சாவு

பெங்களூருவில் 26 பேர், மைசூருவில் 6 பேர், சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடாவில் தலா 3 பேர், பல்லாரி, தார்வார், கோலாரில் தலா 2 பேர், பாகல்கோட்டை, பெங்களூரு புறநகர், சித்ரதுர்கா, ஹாவேரி, கலபுரகி, சிவமொக்கா, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். நேற்று 7,153 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 737 ஆக உயர்ந்து உள்ளது. 86 ஆயிரத்து 749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

935 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 72 லட்சத்து 81 ஆயிரத்து 90 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story