காஞ்சீபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


காஞ்சீபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 3:47 AM IST (Updated: 10 Nov 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரி கரையில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரி கரையில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், தன்னிச்சையாக அறிவித்த 10 சதவீதம் போனஸ் அறிவிப்பை கைவிட வேண்டும், கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட விடுப்புகளை திருப்பி வழங்க வேண்டும், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் காஞ்சீபுரம், ஓரிக்கை, தாம்பரம், செங்கல்பட்டு, பொன்னேரி, கோயம்பேடு போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story