அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- சாலை மறியலில் ஈடுபட்ட 119 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்- சாலை மறியலில் ஈடுபட்ட 119 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகள் சார்பில் டிசம்பர் 8-ந் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று அரியலூர் பகுதியில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் அனைத்தும் ஓடின. அரசு கலைக்கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், அரசு அலுவலங்கள் திறந்து இருந்தது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் அரியலூர் அண்ணாசிலை அருகில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாரணவாசி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சியை சேர்ந்த விவசாய அணிகள், கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஜெயங்கொண்டம்- தா.பழூர்
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் நேற்று காலை முதல் ஜெயங்கொண்டம், சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடைகள் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டிற்கு வந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் தா.பழூர் பகுதி வணிகர்கள் கடையடைப்புக்கு முழு ஆதரவு தெரிவித்து தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் வழக்கம்போல் சென்று வந்தனர். வணிக நிறுவனங்கள் இயங்காததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆண்டிமடம்- மீன்சுருட்டி
அனைத்து விவசாயிகள் சங்கம் விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணா, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், நடேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 63 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலை அனைவரையும் விடுவித்தனர். வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வணிகர் சங்கங்களின் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன.
மீன்சுருட்டியில் மேலணிக்குழி, பாப்பாக்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடியிருந்தன. மளிகை கடைகள், டீ கடைகள் மற்றும் ஓட்டல்கள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயங்கியது. அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் வழக்கம் போல் இயங்கியது. பால் மற்றும் மெடிக்கல் கடைகள் மட்டுமே திறந்து வைத்திருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதேபோல் கீழப்பழுவூர், திருமானூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 119 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story