கிராமங்களில் குற்றங்களை தடுக்க போலீசார் நியமனம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிராமங்களில் குற்றங்களை தடுக்க 15 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ேபரளத்தில் போலீஸ் துறை சார்பில் கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசார் பொதுமக்களுக்கு நண்பனாக விளங்கவேண்டும். போலீஸ் துறை பொதுமக்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு குற்றங்களை தடுக்க 15 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தீர்வு
உங்கள் கிராமத்தில் உள்ள குறைகளையும், குற்றங்களையும் அவ்வப்போது நீங்கள் அவர்களிடம் தெரிவிக்கலாம்.
அவர்கள்(போலீசார்) பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
குடவாசல்
நன்னிலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நன்னிலம், பேரளம், எரவாஞ்சேரி, குடவாசல், வலங்கைமான், அரித்துவாரமங்கலம, ஆகிய போலீஸ் நிலையங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் விசாரணை முகாம் குடவாசலில் நடந்தது.
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கினார். நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். .
முகாமில் போலீஸ் சூப்பிரண்டு துரை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீஸ் நிலையங்களில் பல்வேறு மனுக்கள் பொது மக்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை 6 குழுக்கள் விசாரணை செய்துள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தற்போது விசாரணை செய்து வருகிறோம். சிவில் வழக்குகள் மட்டும் போலீஸ் விசாரணை செய்து மனுதாரர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்தால் உடனடியாக தீர்வு காணப்படும். இல்லையென்றால் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கிராமங்களில் குற்றங்களை தடுக்க தினமும் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்றுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் இன்ஸ்பெக்டர்கள் சுஜித்ஆனந்த், ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத், அன்னவாசல் ஊராட்சி தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story