உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருட்டு


உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 Jan 2021 8:45 PM GMT (Updated: 2021-01-17T01:10:29+05:30)

உத்திரமேரூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.

வீட்டின் பூட்டு உடைப்பு
உத்திரமேரூரை அடுத்த மானாமதி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 34). இவர் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் திரைப்படம் பார்க்க சென்றதாக தெரிகிறது.அவரது மனைவி ரேவதி பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் 1½ மணி அளவில் சிவபிரகாசம் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் திருட்டு
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 6 பவுன் நகையும் ரூ.60 ஆயிரமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறார். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை ஏதாவது கிடைக்குமா என்று சோதனை செய்து பார்த்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளையர்கள் வந்து போனது தெரிகிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story