சத்தியமங்கலம் அருகே தொடர் மழையால் நெல் பயிர்கள் சாய்ந்தன


சத்தியமங்கலம் அருகே தொடர் மழையால் நெல் பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 18 Jan 2021 5:07 AM GMT (Updated: 18 Jan 2021 5:07 AM GMT)

சத்தியமங்கலம் அருகே மழையால் ெநல் பயிர்கள் சாய்ந்தன.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டமாக காணப்படுவதும், மழை பெய்துவதுமாக இருந்து வந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் கசிந்து அருகே உள்ள நெல் வயல்களில் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக செண்பகபுதூர் பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவிலான நெல்பயிர்கள் சாய்து கிடக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொள்முதல் செய்ய கோரிக்கை

இதுதொடர்பாக செண்பகபுதூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஆண்டுதோறும் அரசு சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அரசு நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரசு உடனே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story