மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு + "||" + Special welcome to Edappadi Palanisamy visited Kanchipuram

காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரம்

சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தொடங்கி உள்ளன. அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தை தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே புரட்சிபாரதம் கட்சி சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூில் உள்ள புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேலதாளங்களுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கபட்டது.

கோபூஜை

அமைச்சர் பென்ஜமின், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி. சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், பழனி எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் செந்திராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் போந்தூர் எஸ்.சேட்டு, மாநில பாசறை துணை செயலாளர் சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் இறையூர் முனுசாமி, பாசறை காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் மோகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா். கோவிலில் பசுமாடுகளை பராமரிக்கும் கோசாலையை திறந்து வைத்தார்.

அங்குள்ள பசுமாடுகளுக்கு கோபூஜை செய்தார். பின்னர் அவர் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

அண்ணா நினைவு இல்லம்

காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டைக்கு வருகை புரிந்த முதல்-அமைச்சரை காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், ஆன்மிக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், முத்தியால்பேட்டை போன்ற இடங்களில் தேர்தல் பிரசாரம் முடித்துவிட்டு காஞ்சீபுரத்திற்கு வருகை புரிந்தார்.

சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்-அமைச்சரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி அருகே தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தமிழக முதல்வரை மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலைச்செல்வி மேகநாதன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பூக்கடை ஆர்.டி.சேகர், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், வி.ஆர்.மணிவண்ணன், உள்பட பலர் வரவேற்றனர்.

விவசாயிகளுடன் சந்திப்பு

நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற அவர் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள் பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

உத்திரமேரூர் வருகை தந்த முதல்-அமைச்சருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது. நாடக கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் பெண்கள் பூரண கும்பத்துடன் முதல்வரை வரவேற்றனர். காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.தர்மன், கே.பிரகாஷ் பாபு, தங்க பஞ்சாட்சரம் பேரூராட்சி செயலாளர் ஜெய விஷ்ணு, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் தணிகைவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் என்.எஸ.மணி, பொதுக்குழு உறுப்பினர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் பேரூராட்சி சார்பாக முதல்-அமைச்சருக்கு 2 காளைகள் பரிசாக வழங்கப்பட்டது மேலும் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரத்து 84 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4. ‘சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை நமக்கு தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள்' தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை நமக்கு தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும், வெற்றி மாலையை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்றும் தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளனர்.
5. கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று துவக்கினார்.