மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை + "||" + Waterlogged paddy crops in Perambalur district: Fields should be inspected and relief provided; Farmers demand

பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
தண்ணீாில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ள வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகசூல் கிடைக்காது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் வதிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கியதால், நெற்பயிர்கள் சாய்ந்து மூழ்கின.

தற்போது வெயில் அடிக்க தொடங்கியதால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களில் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. மேலும், வைக்கோல்கள் அழுகிவிட்டன. அவற்றை அறுவடை செய்தாலும் பெரிய அளவில் மகசூல் கிடைக்காது.

அறுவடைக்காக செய்யும் செலவுத்தொகை கூட கிடைக்காது என்பதால், அவற்றை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக மிகுந்த மன வேதனையோடு விவசாயிகள் தெரிவித்தனர்.

அடுத்த சாகுபடிைய ேமற்கொள்ள...
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் ஒருபோகம் சம்பா சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்திருந்தோம். நல்ல விளைச்சல் கண்டிருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் அறுவடை செய்யலாம் என்று இருந்தோம். ஆனால், அதற்குள் எதிர்பாராதவிதமாக பெய்த தொடர் மழையால் விளைந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்தன. வயலில் தண்ணீர் தேங்கியே இருந்ததால் சாய்ந்த பயிர்களில் நெல்மணிகள் முளைத்துவிட்டன.

இதை அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலை விட, கூலிக்கு அதிகம் செலவாகும் என்பதால், இவற்றை வயலில் அப்படியே விட்டுவிடலாம், என்று உள்ளோம். நெல் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று தெரியவில்லை. தமிழக அரசு எங்களின் வயல்களை அதிகாரிகளை கொண்டு கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே நாங்கள் அடுத்த சாகுபடியை மேற்கொள்ள முடியும்' என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
2. சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து; முதல் அமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
4. பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.
5. பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவர்; பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பொதுப்பாதையில் உள்ள சுவரை அகற்றக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.