மாவட்ட செய்திகள்

10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல் + "||" + 101 kg of gold seized at Chennai airport during Corona period of 10 months

10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல்

10 மாத கொரோனா காலத்தில் சென்னை விமான நிலையத்தில் 101 கிலோ தங்கம் பறிமுதல்
10 மாத கொரோனா காலத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடத்திவரப்பட்டதாக 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் சரக்கக சுங்க இலாகா அலுவலகத்தில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுங்க இலாகா அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.


பின்னர் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 மாத கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றங்களை தடுப்பது மிகுந்த சவாலாக இருந்தது. கொரோனா காலத்தில் பன்னாட்டு முனையத்திற்கு 540 சிறப்பு விமானங்கள் வந்தன. அதில், 2 லட்சம் பேர் வரை பயணம் செய்தனர்.

10 மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பன்னாட்டு சரக்ககம் மற்றும் பன்னாட்டு தபால் நிலையங்களில் கடத்தப்பட்டதாக ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 102 போதை பொருட்களை பறிமுதல் செய்து, 11 பேர் பிடிப்பட்டனர்.

ரூ.46 கோடி தங்கம் பறிமுதல்

மேலும், தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியதாக 64 வழக்குகளில் ரூ.46 கோடி மதிப்புள்ள 101 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக 80 பயணிகள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் டாலர், யூரோ, உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களும் பிடிபட்டன.

அதைத்தொடர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த அரியவகை உயிரினங்களான எலி, அணில், ஓணான், பச்சோந்தி உள்ளிட்ட வனவிலங்குகள் உரிய அனுமதியின்றி கடத்தி வந்ததாக பிடிபட்டன. தென் இந்தியாவில் கொரோனா காலத்தில் சிறந்த முனையமாக செயல்பட்டதாக சென்னை விமான நிலையம் விளங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், விமான நிலையத்தில் மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது. தேசிய கொடியை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சுனில் தத் ஏற்றி வைத்து மத்திய தொழிற்படை போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
2. கனடாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்
கனடாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,428-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. வெங்கலில் குடோனில் பதுக்கிய 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் 6 பேர் கைது
வெங்கலில் லாரிகளில் கடத்தி வந்து விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்த 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை சென்னை மத்திய புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.