ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்


ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 2 Feb 2021 9:34 PM GMT (Updated: 2021-02-03T03:04:57+05:30)

ஈரோட்டில் 2-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்

ஈரோடு, 

ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோட்டில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சுதாகர், எஸ்.எஸ்.சுகுமார், சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

Next Story