திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 8 March 2021 4:01 AM GMT (Updated: 8 March 2021 4:01 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குமரஞ்சரி கிராமத்தில் உள்ள முருகன் மற்றும் பொன்னியம்மன் கோவில் பூசாரிகள் நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

போலீஸ் விசாரணையில், பொன்னியம்மன் கோவிலின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

அதே போல முருகன் கோவிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story