காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 20 March 2021 5:01 PM IST (Updated: 20 March 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

காஞ்சீபுரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் மகேஷ்குமார், தி.மு.க. சார்பில் சி.வி.எம்.பி.எழிலரசன், அ.ம.மு.க. சார்பில் மனோகரன், மக்கள் நீதி மையம் சார்பில் எஸ்.கே.பி.கோபிநாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாமுவேல் சால்டின் உளளிட்ட 36 பேர் மனு தாக்கல் செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேட்பாளர் மதனந்தபுரம் கே.பழனி (அ.தி.மு.க.), செல்வபெருத்தகை (காங்கிரஸ்) மொளச்சூர்பெருமாள் (அ.ம.மு.க.), மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி சார்பில் தணிகைவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட 25 பேர் மனுதாக்கல் செய்தனர்.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று ஒரே நாளில் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதுவரை அ.தி.மு.க. சார்பாக வி.சோமசுந்தரம், தி.மு.க. சார்பாக க.சுந்தர், அ.ம.மு.க. சார்பாக ஆர்.வி.ரஞ்சித்குமார், நாம் தமிழர் கட்சி சார்பாக காமாட்சி, சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சூசையப்பர் உள்ளிட்ட 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.ஆலந்தூர் தொகுதியில் பா.வளர்மதி(அ.தி.மு.க.), தா.மோ.அன்பரசன்(தி.மு.க.), சரத்பாபு(மக்கள் நீதி மய்யம்), கார்த்திகேயன்(நாம் தமிழர் கட்சி), முகமது தமீம் அன்சாரி(எஸ்.டி.பி.ஐ.) உள்பட 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 210 பேர் மனுதாக்கல் செய்தனர்.செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் கஜா என்கிற கஜேந்திரன் (அ.தி.மு.க.), வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.), டாக்டர் சதீஷ் குமார் (அ.ம.மு.க.), சஞ்சீவி நாதன் (நாம் தமிழர் கட்சி்) முத்தமிழ்செல்வன் (இந்திய ஜனநாயக கட்சி) உள்ளிட்ட 30 பேர் இது வரை மனுதாக்கல் செய்தனர்.திருப்போரூர் தொகுதி சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணியின் பா.ம.க., வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், தி.மு.க., கூட்டணியின் வி.சி.க., வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனசுந்தரி, அ.ம.மு.க., வேட்பாளர் கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லாவண்யா உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர்.

தாம்பரம்
தாம்பரம் தொகுதியில் டி.கே.எம்.சின்னையா(அ.தி.மு.க.), எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.), கரிகாலன் (அ.ம.மு.க.), சிவ இளங்கோ(மக்கள் நீதி மய்யம்), சுரேஷ்குமார்(நாம் தமிழர் கட்சி) உள்பட 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்று மட்டும் 13 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.பல்லாவரம் தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.), இ.கருணாநிதி (தி.மு.க.), அனகை முருகேசன் (தே.மு.தி.க.), செந்தில் ஆறுமுகம் (மக்கள் நீதி மய்யம்), வினிஸ்ரீ(நாம் தமிழர் கட்சி) உள்பட 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர்( தனி), மதுராந்தகம்( தனி), சோழிங்க நல்லூர் என்று மாவட்டத்தில் மொத்தம் 210 பேர் மனு தாக்கல் செய்தனர்.
1 More update

Next Story