காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 March 2021 6:35 AM IST (Updated: 31 March 2021 6:35 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக அரசு ஈடுபடுத்த உள்ளது.

எனவே இந்த பணிக்கு செல்ல விருப்பமும் உடல் திடகாத்திரமும் உள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பணிபுரிய விருப்ப மனு அளிக்கும் அனைவருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலமாக தபால் ஓட்டுக்கு வழிவகை செய்யப்படும். மேலும், தேர்தல் பணி ஆட்சேர்ப்பு நிமித்தமாக விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் இயங்கும் என்பதால் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் அந்த தினங்களிலும் அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை) தேர்தல் பணி விருப்ப விண்ணப்பத்தினை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநரை 044-2226 2023 என்ற எண்ணில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story